1) G7 (2021) உச்சி மகாநாட்டிலே வெளியிடப்
பட்ட கூட்டறிக்கையினுடைய பெயர் யாது?
2) ஆசியா நாடுகளிலே எவரெஸ்ட் சிகரத்திலே ஏறிய முதலாவது பார்வை அற்ற வீரரின் பெயர் யாது? இவர் எந் நாட்டை சேர்ந்த வீரர் என்பதையும் குறிப்பிடுக?
3) உலகளாவிய ரீதியிலே முதன் முதலாக மரபணு மாற்றம் செய்யப் பட்ட இறப்பர் விளைவிக்கப் பட்டது எந் நாட்டிலே?
4) உலகின் பல நாடுகளினால் சட்ட விரோதமாக கருதப் படுன்ற பிட்கொயின் என்கின்ற இலத்திரனியல் நாணயத்தினை சட்ட ரீதியாக அங்கிகாரம் வழங்கிய முதலாவது நாடு யாது?
5) பின்வருவோர் பற்றிய நடப்பு விடயத்தை சுருங்கக் கூறுக?
(எடுத்துக் காட்டாக நரேந்திர மோடி என்று தரப்படும் போது இந்தியாவின் பிரதம மந்திரி என பதில் அளித்தல் வேண்டும்)
அ) மஜ்முத் ஜமால்- கனடா நாட்டினுடைய உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றுகின்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர்.
ஆ) இராஜகோபால் ஈச்சம்பாடி- அமெரிக்க நாட்டின் சிக்காக்கோ நகரில் அமைவிடம் பெற்ற இலினொய் பல்கலைக்கழகத்தினுடைய இந்திய நாட்டு வம்சாவளியை சேர்ந்தவராக முதன் முதலாக நியமிக்கப் பட்ட பத்தாவது தலைவர்.
இ) இப்ராஹிம் ரைசி- ஈரான் நாட்டு ஜனாதிபதி தேர்தலிலே வெற்றி வாகை சூடிய பிரதம நீதியரசர்.
ஈ) அந்தோனியோ குட்டரஸ்- இந்த ஆண்டும் இனி வருகின்ற ஐந்து ஆண்டுகளிலும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக பதவி வகிக்க தெரிவு செய்யப் பட்டவர்
உ)சத்ய நாடெல்லா- Microsoft நிறுவனத்தின் புதிய தலைவர்.
6) உலகளாவிய ரீதியிலே வெளியிடப்படுகின்ற முதலீட்டு அறிக்கை-2021 இன் படி FDI இல் முன்னணி வகிக்கின்ற நாடு யாது?
7) உலகளாவிய ரீதியிலே அமைதிச் சுட்டெண்ணை மதிப்பிடுகின்ற நிறுவனம் யாது? அமைதிச் செயற்பாடுகளிலேயே கடைசி இடம் பிடித்துள்ள நாடு யாது?
8) யூலை மாதத்தில் நடை பெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலே பங்கேற்ற முதலாவது திருநங்கையின் பெயர் யாது? அவர் எந் நாட்டை சேர்ந்தவர்?
9) குறிப்பிடத்தக்க சில நாடுகளினது இணையத் தள இணைப்பினை அதிகரிப்பதற்காக கடலடி கம்ப வடம் (open subsea cable) என்கின்ற திட்டத்தை செயற்படுத்த இருக்கின்ற நிறுவனம் யாது? இத் திட்டத்தினுடைய பெயரைத் தருக?
10) வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது பிறிதொரு அமைப்புடன் சேர்ந்து பணியாற்றவிருக்கின்றது அந்த அமைப்பினுடைய பெயர் யாது? அந்த திட்டத்தினது பெயரைக் குறிப்பிடுக?
மத்தியவங்கியினால் வெளியிடப் படுகின்ற 2020ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை
Central Bank Report-2020
11) கல்வி மீதான இலங்கை அரசினது செலவீனத்தின் விகிதம் யாது?
12) இலங்கை நாட்டு பாடசாலை ஆசிரியரொருவருக்கு மாணவர்களினுடைய எண்ணிக்கை யாது?
13) பல்கலைக்கழக விரிவுரையாளரொருவருக்கு மாணவர்களின் எண்ணிக்கையைத் தருக?
14) இலங்கை சுகாதாரம் மீதான அரச செலவீனத்தின் வீதம் யாது?
15) இலங்கை நாட்டிலே மருத்துவர் ஒருவருக்கான நோயாளிகளினுடைய எண்ணிக்கை யாது?
16) மருத்துவ துறையிலே ஒவ்வொரு 10000 நோயாளிக்குமான தாதியர்களின் எண்ணிக்கை யாது?
17) ஒவ்வொரு 1000 நோயாளிக்குமான வைத்தியசாலை படுக்கைகளின் எண்ணிக்கை யாது?
18) 13 ஆவது பிரிக்ஸ் மகா நாட்டுக்கு தலைமை தாங்கிய உறுப்பு நாட்டின் பெயர் யாது?
தொனிப்பொருள் யாது?
19) சர்வதேச அமைதி சுட்டெண்ணிலே முதலிடத்தை வகிக்கின்ற நாடு யாது? இலங்கை நாடானது அமைதிச் சுட்டெண்ணிலே எத்தனையாவது இடத்தை பெற்றுள்ளது?
20) மரத்தினால் உருவாக்கப்பட்ட செயற்கை கோளினை விண்வெளியிலே ஏவுவதற்காக உருவாக்கி வருகின்ற நாடு யாது? அந்த தொழினுட்பத்தினுடைய பெயர் எவ்வாறு அழைக்கப் படுகின்றது?
21) ஊக்க மருந்து பயன்பாடு நிமித்தம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலே இருந்து நீக்கப்பட்ட நாடு யாது?
22) திரிபடைந்த வைரஸ்களான
பி.1.167.2 ,
பி.1.1617.1 என்பவற்றிற்கு பெயரிடப்பட்ட பெயர்களை முறைப்படி தருக?
23) சீன நாடு முன்மொழிந்துள்ள Belt & Road திட்டத்திற்கெதிராக அமெரிக்க நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அவர்களினால் முன் வைக்கப்பட்டிருக்கின்ற திட்டத்தின் பெயர் யாது?
24) இலங்கை நாட்டிலே எத்தனை கிராம சேவையாளர் பிரிவுகள் காணப் படுகின்றன?
Post a Comment
Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்