Financial-Regulations Financial-Regulations - examsguide.lk

Financial-Regulations               நிதி ஒழுங்கு விதிகள்



அரசாங்க அலுவலகமொன்றில் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவு நடைமுறையின் படிமுறைகளை சுருக்கமாக விளக்குக? (25 புள்ளிகள்)

உறுதிச்சீட்டு சான்றுறுதி படுத்தப்பட்டுள்ளதா எனப் பார்த்தல்

உறுதிச் சீட்டுக்கு இலக்கம் இடப்பட்டுள்ளதா எனப் பார்த்தல்

உறுதிச்சீட்டில் குறிப்பிட்ட தொகையில் அல்லது வேறு எதிலும் மாற்றம் அல்லது திருத்தம் செய்யப்பட்டுள்ளதா? என அவதானித்து மாற்றம் செய்யப்பட்டிருப்பின் அதற்காக சான்றுறுதிப்படுத்துவதில் முதலொப்பம் இடப்பட்டிருத்தலை உறுதிப்படுத்தல் 

உறுதிச்சீட்டில் குறிப்பிட்ட தொகைக்கே காசோலை வரையப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தல்

காசோலை வரையும் முன் காசேட்டின் காசு மீதி மற்றும் வங்கி மீதி என்பவற்றை சரிபார்த்தல்

பெறுநரின் அடையாளத்தை உறுதிப்படுத்தல்

கொடுப்பனவின் போது பெறுநரின் கையொப்பத்தை பெறல் அத்துடன் முத்திரை ஒட்டப்பட்டுள்ளதை உறுதி செய்தல்

கொடுப்பனவு செய்யப்பட்டவுடன் உறுதிச்சீட்டில் paid  முத்திரை பொறிக்கப்பட்டு அதில் காசோலை இலக்கத்தை குறிப்பிடல் அத்துடன் முத்திரை மீது மேலோப்பமிடல்


தங்களது அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறுபட்ட கட்டுநிதிகள் 03 ஐ விளக்குக?       (25 புள்ளிகள்)

சில்லறை காசுக் கட்டு நிதி petti cash sub imprest

சில்லறைச் செலவினங்களை அனுமதிக்கப்பட்ட வரையறைக்குள் மேற்கொள்வதற்கு வழங்கப்படும் பணம் சில்லறை காசு உப கட்டுநிதியாகும். (அதிகபட்சம் 7500 வரை வழங்கலாம்)


நிமித்த உபகட்டு நிதி ad- hoc sub imprest

ஏதேனும் குறித்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு பணம் தேவைப்படுமிடத்து யாரேனும் பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு முற்பணமாக வழங்கப்படும் தொகை ஆகும். (அதிக பட்சம் 20000 வரை வழங்கப்படலாம்)


தொடர்ச்சியான கட்டுநிதி continuous sub imprest

ஒரு திணைக்களம் தனது உப திணைக்களத்திற்கு அதற்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கும் வழங்கம் தொகை ஆகும். இதனை மாதாந்த கணக்குக் கூற்றுகளை சமர்ப்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம்



வழங்கல் நடவடிக்கையின் போது பின்பற்ற முடியுமான பல்வேறுபட்ட பெறுகை முறைகள் 4 ஐ விளக்குக?    (25 புள்ளிகள்)

..........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................


வருடாந்த பொருள் சுற்றாய்வின் அடிப்படை நோக்கங்கள் நான்கினை சுருக்கமாக குறிப்பிடுக?

களஞ்சியப் பொருட்களின் இருப்பினை உறுதி செய்தல்

பொருட்களின் பௌதீக மீதியினை படிவம் திறைசேரியும் கணக்காய்வில் உள்ளவாறு செவ்வை பார்த்தல்

வருடத்தின் பெறுவனவுகள் வழங்கல்கள் யாவும் உரிய ஏடுகளில் பதியப்பட்டிருப்பதை உறுதி செய்தல்

ஏடுகள் சரிசெய்யப்பட்டு மீதி சரியாக காணப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்தல்

ஆரம்ப மீதி சரியாக பதியப்பட்டுள்ளதா என செவ்வை பார்த்தல்

புத்தகங்களின் படி மீதிகள் சரியாக திறைசேரியும் கணக்காய்வும் படிவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல்







Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post