Srilanka Planning Service Limited Exam Past Papers Srilanka Planning Service Limited Exam Past Papers - examsguide.lk

 Srilanka Planning Service 2011/2012      Past Papers


 >

You have to wait 30 seconds.
Download Timer

Your download will begin in 30 seconds.










நாடாளாவிய ரீதியில் தற்போது விண்ணப்பபம் கோரப்பட்டுள்ள அரச உயர் சேவைகளில் திட்டமிடல் சேவையும் உள்ளடங்குகின்றது.

SLAS க்கு அடுத்ததாக Srilanka Planning Service இல் உள்ளவர்களால் மட்டுமே Secretary செயலாளராக உயரக் கூடிய சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

திணைக்களங்களில் Director General,Commissioner General Post தான் அதி உயர் பதவி ஆகும். இது Additional Secretary Postக்கு சமனாகும். இந்த பதவியை விட அடுத்த கட்டம் முன்னேற்றகரமான உயர் பதவியாக செயலாளர் பதவி காணப்படுகின்றது.

இந்த முறை SLAS,SLPS,SLAcS,SLEAS போன்ற Exam ஒரேயடியாக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. நியமனங்கள் Online applicationனில் நிரப்பியுள்ள விருப்ப தேர்வின் அடிப்படையில் தான் பதவிகள் வழங்கப்படவுள்ளன.

முதலில் கீர்த்தி மிகு சேவையான SLAS ஐ தெரிவு செய்த பின்னர் இரண்டாவது தெரிவாக திட்டமிடல் சேவையை தெரிவு செய்தல் உத்தமம்.

மேற்படி எல்லா Examsகளுக்கும் முதலில் நுண்ணறிவு, கிரகித்தல் பரிட்சை நடைபெறவுள்ளது அவற்றில் 40+40 Marks ஒரு பாடத்தில் குறைந்த பட்சம் வருவதோடு அவற்றின் கூட்டுத்தொகை 100 ஆக இருந்தால் தான் திட்டடமிடலுக்கான சிறப்பு பாடத்திற்கு 300/- கட்டி தோற்ற முடியும். சிறப்பு பாடமாக பொது விவேகம் என்ற தலைப்பில் பொது அறிவு சார் விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றார்கள்.

முதல் இரு பாடங்களிலும் சித்தி பெற்றால் தான் சிறப்பு பாடத்தில் தோற்ற முடியும் என்று எல்லாரையும் போல கவனக்குறைவாக இருந்து விடாதீர்கள். இப்போதிருந்தே Gazetteஇல் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை கவனித்து அதற்கேற்றாற் போல் தயாராகி கொள்ளுதல் வாஸ்தவம்.

இது தான் இறுதிச்சந்தர்ப்பமாக 28 வயதுடையவர்களுக்கு இருக்கப் போகின்றது. இல்லையேல் அரச வேலையுடன் அதுவும் MN1 Post or அதை விட உயர் பதவியில் 5 வருடத்தின் பின்னரே Exam Limited இல் எழுத முடியும் என உணர்ந்து ஒவ்வொரு நாளும் சமகரிசனை எடுத்து அனைத்துப் பாடங்களையும் நேரம் ஒதுக்கி படித்துக் கொள்ளுங்கோ.

சோம்பியிருந்து விட்டு இனப்பாரபட்சம் என்று வளவாளர்களை போல நொண்டிச்சாட்டு சொல்லும் பொதுப்பிம்பத்திற்கு அடிமை ஆகி விடாதீர்கள். Concentrate your studies. Do not waste your time.

SLPS Post Officersஉம் SLAS Officers போல Secretary Postக்கு உயர முடியும் என்பதை கருத்திற் கொண்டு SLAS மட்டும் தஞ்சம் என எண்ணாமல் Planning Service க்கும் உள்நுழைய முயற்சியுங்கள். SLAS இற்கு அடுத்தாக இந்த துறையினர் மட்டுமே Secretary Post வரை உயரக்கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலதிக நேரக் கொடுப்பனவு,பதில் கடமையினை மேற்கொள்ளும் பட்சத்தில் பதில் கடமை கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
வயதும்,வாலிபமும் உள்ள போதே இந்த உயர் பதவிகளுக்கு வந்து கொள்ளுங்கள்.. Limited ஊடாக 5 வருடத்தின் பின்னரோ அல்லது 10 வருடத்தின் பின்னரோ வருவோம் என்பது எல்லாம் சாத்தியப்படாது. வயது போன பின்னர். மூளை விரும்பும் போது உடம்பு ஒத்துழைக்காது. உடம்பு ஒத்துழைத்தால் மூளை ஒத்துழைக்காது. ஆகவே இப்போதிருந்தே தொடர்ந்தேர்ச்சியாக கற்றுக்கொள்ளல் உத்தமம். இந்த பொன்னான வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள். உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

இலங்கை திட்டமிடல் சேவையின் கடமை யாது? அவர்களால் ஏன் இலங்கை நாட்டை அபிவிருத்தியடைய செய்ய முடியாதுள்ளது? எங்கே தோற்றுப் போகின்றோம் என்பது தெரியாயாமலே திட்டமிடல் சேவை உத்தியோகத்தர்களும் இனிவரும் காலங்களில் உதாசீனமாக செயற்பட முடியாது.

பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியொன்றில் அரசாங்கத்தினால் கட்டமைக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் வழங்கப்பட்ட வீடுகள் வெடித்துக் கொண்டு வருவதாக புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. எந்த உட்கட்டமைப் பு திட்டங்களாக இருந்தாலும் அதற்குரிய Tender ஒப்பந்தம் கோருவதும்,அதை வழங்கி உரிய வகையில் தரமானதா? என கண்காணிப்பதோடு எதிர் காலத்திலும் மேற்பார்வை செய்து வினைத்திறனற்ற ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்தத்தை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் SLPS officers ஒப்பந்தத்தை வழங்குவதோடு மட்டும் தங்கள் கடமை நிறைவுற்றதாக எண்ணத் தலைப்பட்டிருக்கின்றார்கள் போல? அதனால் தான் அத்தனையும் வினைத்திறனற்ற திட்டங்களாகவும்,நீண்ட கால பாவனைக்கு உதவாத திட்டங்களாகவும் காணப்படுகின்றன. ஆக இந்த அபிவிருத்தி குன்றிய நிலைமைக்கு இவர்கள் தான் பொறுப்பு கூற வேண்டும்.

உதாரணத்திற்கு வீதிகளை எடுத்துக் கொண்டோமானால் போட்ட அடுத்த மாதமே பாவனைக்கு உதவாததாக மாறி விடுகின்றது. குன்றும் குழியும் விழுந்து விடுகின்றது. இதற்கு இத்தனை காலமும் எஞ்சினியரிங் படிக்கிற மாணவர்கள் தான் காரணம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவர்களை இயக்குகின்ற ஒப்பந்தக்காரர்களும், அதை சரிவர மேற்பார்வை செய்யாத இலங்கை திட்டமிடல் சேவை உத்தியோகத்தர்களும் தான் காரணம் என்று இப்போது தான் தெரிகின்றது..

முறையற்ற, வினைத்திறனற்ற செயற்றிட்டங்களை மேற்கொள்ளும் ஒப்பந்தக்காரர்களின் ஒப்பந்தத்தை இல்லாமல் செய்து Blacklist பண்ணிக் கொண்டு வந்தால் தான் நீடித்து நிலைத்திருப்பான அபிவிருத்தி திட்டங்கள் மக்களை சென்றடையும்.

அவ்வாறான செயல்திட்டங்களை மேற்பார்வை செய்ய வைத்து வினைத்திறனான Out put ஐ தரக் கூடியவர்களை இலங்கை நிர்வாக சேவைக்கு உள் வாங்கினால் தான் உட்கட்டமைப்பு விருத்தி ஏற்பட்டு நாடும் விருத்தி அடையும்.


ஆட்சேர்ப்பில் இந்த நடைமுறையை பின்பற்ற முடியா விட்டால் நீடித்து நிலைத்திருக்கின்ற வேலைத்திட்டங்களை மேற் கொள்கின்றவர்களுக்கு மட்டும் சம்பள உயர்வு, ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கலாம். இப்படி ஏதாவது மாற்றங்களை உட்கொண்டு வந்தால் தான் நாடு தன்னிறைவடைந்து விருத்தி காண விளையும்.

மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதே திட்டமிடல் சேவையாகும். மலசலகூடம்,கிணறு, வீடு என்பவை அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்படும் போது உரிய தேவைப்பாடுள்ளவர்களை இனங்கண்டு வழங்க வேண்டிய கடப்பாடு இவர்களிடமே ஒப்படைக்கப் பட்டுள்ளது.

மலேரியா,டெங்கு ஒழிப்பு,கொரோனா ஒழிப்பிற்கான நிதி திட்டமிடல் துறையினால் தான் வழங்கப்பட்டு மேற்பார்வை செய்யப் படுகின்றது.

நோய்களுக்கான நிவாரணங்கள், தடுப்பூசிகள் திட்டமிடல் பிரிவின் நிதி முகாமைத்துவத்தினால் தான் நிர்வகிக்கப் படுகின்றது.

ஆக இலங்கை திட்டமிடல் துறையின் வகிபாகம் தான் பெருமளவில் இலங்கை நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய வல்லது.

தங்கள் கடமையை செவ்வனே நிறைவேற்றுகின்றார்களா என்ற கேள்வியை எழுப்பினால் இல்லை என்பதே பதிலாக இருக்கின்றது. ஆதலால் தான் இன்னும் இலங்கை நாடு அபிவிருத்தியடையாமல் இருக்க காரணம். .

Planning Service Officersஇன் Administration செயற்பாடுகளை Public Admin and Management Ministryயின் Planning aservice Unitஇனால் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.

நாடளாவிய சேவைகளில் ஒன்றாக Srilanka Planning Service Srilanka Socialist Republic Democraticனால் 1985 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 19ம் திகதி 345/40 ஆம் இலக்க Extra Ordinary Gazette இல் Public செய்யப்பட்ட Service பிரமாண குறிப்பின் ஏற்பாட்டுக்கிணங்க பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.


Srilanka Planning Serviceஇன் செயற்பாடுகள்,தொழிற்பாடுகள் எவை என நோக்கின் இலங்கை நாட்டினுள் சமுதாய மற்றும் முன்னேற்றகரமான பொருளாதார விருத்தியினை உருவாக்கும் முகமாக செயற்றிட்டங்களை, projectகளை Plaaning,Implementation, செயலாற்றுதல், மதிப்பிடல், உட்கட்டமைப்பு மட்டும் விதேசிய சேவை வளப்பயன்பாடுகளினை அமுலாக்கல், National,Regional Community Development Planning சார்ந்த விருத்தியடையடைந்த செயற்பாடுகளை உருவாக்கும் முகமான கண்காணிப்புக்கள், மேற்பார்வைகளை மேற்கொண்டு நீடித்து நிலைத்திருப்பான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளலும் Planning Serviceஇன் தொழிற்பாடுகளாக காணப்படுகின்றன.

SLPS இன் பணிக்கூற்றை நோக்கின்,
Administrative செயற்பாடுகள் மூலம் ஒழுங்கு விதிகளை செவ்வனே நேர்த்தியாக செயல் வடிவம் கொடுத்தல், புத்தம் புது அபிவிருத்தி கொள்கைத்திட்டங்களை அறிமுகம் செய்தல், திட்டமிடல் சேவை அலுவலர்களினது கொள்ளளவினை, ஆளுமையினை, வினைத்திறனை,விளைதிறனை விருத்தி செய்து தரம் வாய்ந்த வெளியீட்டினை வடிவமைத்து மீயுயர் திறன் அபிவிருத்தியை திட்டமிடல் சேவை ஊடாகப் பெற்றுக் கொடுப்பதே பணிக்கூற்றாக நோக்கப்படுகின்றது.

திட்டமிடல் சேவையின் நோக்கம் யாது என கவனித்தால், Human Resources Management Policyயினை உருவாக்குதல்,
இலங்கை நாட்டில் வசிக்கின்ற அத்தெனை பொதுமக்களினதும் தேவைகளை,விருப்பங்களை நிறைவேற்றுகின்ற வண்ணம், விளைதிறனான, வினைத்திறனான, நீடித்து நிலைத்திருக்க கூடிய விருத்தியடைந்த சேவையினை வெளியீடாக Produce பண்ணுவதாகும்

இலங்கை நிர்வாக சேவையின் பின்னர் முதன்மையிடம் வழங்கப்படுகின்ற திட்டமிடல் சேவையின் முக்கியமான செயற்பாட்டு நடவடிக்கையை பின்வருமாறு விதந்துரைக்க முடியும்.
1) ஆட்சேர்த்தல்- வெற்றிடங்களுக்கான விண்ணம் கோரல் அறிவித்தலை வர்த்தமானி மூலம் வெளியிட்டு Open,Limited Exam நடாத்தப்பட்டு சித்திடையக் கூடிய ஆகக்கூடிய புள்ளிகள் வரையறுக்கப்பட்டு அந்த புள்ளிகளை பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு போதிய தகைமைகளை பூர்த்தி செய்பவர்களுக்குரிய List வெளியிடப்பட்டு நியமனம் செய்யப் படுகின்றார்கள்.

2) SLPS நாடளாவிய சேவையாக காணப்படுவதால் நாடு தழுவிய எந்த எந்த திணைக்களங்களில் பிரதேச,மாவட்ட செயலகங்களில்,அமைச்சுக்களை Assistant Director,Deputy Director, Senior Director,Director,Director General என எந்த பதவிக்கு எத்தனை Vacancy
இருக்கின்றது என தொடர்ந்தேர்ச்சியாக Identify பண்ணுதல்

3) மேற்படி வெற்றிட பதவி, எண்ணிக்கையை இனங்கண்டு Management Service Departmentஇன் Approvalஇனை பெறல்

4) அனுமதியைப் பெற்ற பின்னர் வர்த்தமானியில் ஆட்சேர்ப்பதற்கான தகவல்களை வெளியிடுவார்கள்.2021 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை விஞ்ஞான சேவை என்பவற்றோடு இலங்கை திட்டமிடல் சேவைக்கான ஆட்சேர்ப்பு அறிவித்தல் ஒரேயடியாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி கோரப்பட்டுள்ள மேற்படி சேவைகளுக்கு முதலில் ஒரேயடியாக நுண்ணறிவு பரிட்சையும், சுருக்கம்,கட்டுரை,கிரகித்தல் உள்ளடக்கிய மொழித்திறன் Examஉம் நடை பெறும். அதில் ஒரு பாடத்தில் சித்தியடைவதற்கான ஆகக்குறைந்த புள்ளிகள் 40 ஆயினும் இரண்டு பாடங்களை கூட்டி மொத்தமாக 100 Marks எடுத்திருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் தான் உரிய Serviceக்கான பாடங்களை எழுத முடியும். திட்டமிடல் சேவைக்கு மேற்படி தகைமைகளை பூர்த்தி செய்பவர் எழுத வேண்டிய பாடமாக பொது விவேகம் காணப்படுகின்றது. பொது விவேகம் என்பது உண்மையிலேயே நுண்ணறிவு சார்ந்தது. ஆனால் மொழிபெயர்ப்பு தவறு இடம் பெற்றிருக்கின்றது. உள்ளடக்கத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் பொது அறிவு சார்ந்தது.

5) Selection Tests வழமை போல Examination Department இனால் நடாத்தப்படும்

6) Interview இல் ஏற்கனவே குறிப்பிட்டது போல பட்டத்தகைமை,2nd Upper Qualification,வயது போன்ற வர்த்தமானியில் குறிப்பிட்ட விடயங்களை பரிட்சித்து Confirm பண்ணி எல்லாவற்றையும் True copy என Certify பண்ணி பெற்றுக் கொள்வார்கள்.

7) Selected List ஐ Public Service Commissionக்கு அனுப்பி அவர்களின் Approval பெற்றுக்கொண்ட பின்னர் நியமனத்தை வழங்குவார்கள்.

8) நியமனம் வழங்கிய பின்னர் 3 வருட த்திற்குள் வினைத்திறன் தடை தாண்டல் பரிட்சையில் சித்தியடையந்தவர்களை நிரந்தர நியமனத்தை வழங்குவார்கள்.


9) இடமாற்றங்களை வருடாந்த அடிப்படையிலோ வெற்றிடம் ஏற்படும் போது தேவையின் போதோ பெற்றுக் கொடுத்தல்.

​​​​10) பதவியுயர்வினை பெற்றுக்கொடுக்க ஆவண செய்தல்

11) சேவை நீடிப்பு, ஓய்வு பெறும் வயதெல்லையில் ஓய்வு பெறச்செய்து ஓய்வூதியம் வழங்க ஆவண செய்தல்

Public Service Commissionஇன் அங்கீகாரத்தின் படி
Planning Serviceக்குரிய Approval மொத்த பதவி உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 956 மட்டுமே. அதற்கேற்ப உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறும் போது வெற்றிடங்களை நிரப்புவதற்கான வர்த்தமானி அறிவுறுத்தலை வெளியிடுவார்கள். Grade, Class அடிப்படையில் பதவியுயர்வு வழங்கப்படுகின்றது.

இத்தகைய உன்னதமான சேவைக்கு நீங்களும் வந்து காட்டுங்கள் பார்ப்போம்.

கீழேயுள்ள பாடங்களை Click செய்து Download செய்து கொள்ளுங்கள்


கிரகித்தல்


விடயம் சார்ந்த அறிவு- 

Case Study


திட்டமிடல்



Planning என்கின்ற சொற்பிரயோகமானது பிரான்ஸ் நாட்டு சொற்பிரயோகத்திலிருந்து பயன்பாட்டிற்கு உட்பட்டது. அர்த்தம் யாதெனில், முன் நோக்கி பார். வேறொரு வகையாக நோக்கின், செயற்பாடுகள்,நடத்தைக்கோலங்களை மேற் கொள்வதற்கான ஆயத்தநிலை எனக் கூற முடியும்.

நிர்வாக செயற்பாட்டில் ஒழுங்கமைப்போடு ஆட்சேர்த்தலும் திட்டமிடலுக்குட்பட்டே மேற்கொள்ளப் படுகின்றன. எதிர்கால செயற்பாடுகளுக்கு இப்போதுள்ள மக்களின் ஆற்றல், மூலவள பொருள் ஆகியவற்றை நேர்த்தியாகவும், ஆற்றலுடனும் பயன்படுத்துவதன் ஊடாக முழுமைத்துவம் பெற உதவும் நிகழ்ச்சிகளின் வரிசை என்றும் கூற முடியும்.

Planning என்கின்ற கருத்தோட்டம் எவ்வாறு பொது நிர்வாகத்திற்கு உட்புகுத்தப் பட்டது என நோக்கின் Second World Warக்கு பிறகு உலகமெங்கும் பிரபலமானது. நிர்வாக ஒழுங்கமைப்பானது நேர்த்தியாக செயற்பட சரியாக திட்டமிடுதல் இன்றியமையாதது.

திட்டமிடுதல் என்பது யாது? பொதுநிர்வாகத்திற்கு திட்டமிடலின் பங்களிப்பு, வகிபாகம் யாது என அறிஞர் பலர் தம்முடைய கருத்துக்களை முன் வைத்திருக்கின்றார்கள்.

டிமோக் கூறுவது யாதெனில், நாடுகளின் அரசின் நிர்வாகத்தினுடைய அத்தனை செயற்பாடுகளும் திட்டமிடப்படவது அத்தியாவசியமானதாகும்.

நோக்கம், செயற்பாடு, ஒழுங்கமைப்பு, நிதிகள், மேற்பார்வை செய்பவர்களுக்கான கடப்பாடுகள், பொதுக்கள் தொடர்புகள் என அத்தனையும் திட்டமிடப் பட்டேயாக வேண்டும் என தம் கருத்தை முன்வைக்கின்றார்.

வைற் என்ற அறிஞர் ஏற்கனவே ஏற்றுக் கொண்ட கொள்கைகளை நிறைவேற்ற எடுக்கின்ற தீர்மானமான நடவடிக்கையே Planning என்று குறிப்பிடுகின்றார்.

பிஃப்னிர் என்றவர் கொள்கையும், திட்டமிடலும் வேறுபட்டவையல்ல, ஒன்றுடன் ஒன்று சார்ந்தவையாகும் என்கின்றார்.


ஹலோவே Planning என்பது பற்றி தனது வகைப்படுத்தலை பின்வருமாறு முன் வைக்கின்றார்.

கொள்கையை தீர்மானித்தல்,

தகவலை ஆவணப்படுத்தி ஆராய்ச்சியை மேற்கொண்டு எழுகின்ற தவறுகளை,பிழைகளை, குறைபாடுகளை தெரிந்து கொள்ளல்
எழுமாற்று தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளல். சிறப்பானவற்றை தெரிந்து செயற்றிட்டங்களை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகின்றார்.

மில்லட் என்கின்றவர் Planning உள்ளடக்கியிருக்க வேண்டிய நடைமுறையை பின்வருமாறு தெளிவு படுத்துகின்றார்.

குறிக்கோள் உருவாக்கம், அத்தகைய குறிக்கோளை செயல் படுத்த சாதனங்களை, வளங்களை மதிப்பிடல், செயல் திட்டத்தை தயாரித்தல், அதனூடாக திட்டத்தை நடைமுறைப்படுத்தல் வேண்டுமென்கின்றார்.

ஆக திட்டமிடலுக்குரிய பண்புகளாக சிலவற்றை வரையறுக்க முடியும். அவையாவன,

பெளதீக, சமுக பொருளாதார, நிர்வாகம் என வெவ்வேறு வகையிலான இயல்புடையதாகவிருப்பினும்,

பொதுவாக மூன்று பாரிய வகைப்பிரிவாக பிரிக்க முடியும்.

1) Higher Level Administrative Planning.
திட்டமிடலானது அரசினது அமைச்சுக்களை திணைக்களங்களை, நிறுவனங்களை, அதிகார சபைகளை, கூட்டுத்தாபனங்களை என இன்னோரன்ன பகுதி அமைப்புக்களை என எல்லாவற்றையும் உள்ளடக்கப்பட்டு உருவாக்கப்படும்.

மேற்குறிப்பிட்ட 100% அரச நிறுவனங்கள்,பகுதியளவிலான அரச நிறுவனங்கள் திட்டமிடலை செவ்வனே மேற்கொள்ள உயர் பதவி தலைமையை கொண்டிருப்பார்கள். இத்தலைமை மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளின் வழிகாட்டலின் படி செயற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2) தேசிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக Planning.

நாடளாவிய ரீதியில் அத்தனை பொருளாதார நடவடிக்கைகளையும் உள்ளடக்கியிருக்கும். உலக நாடுகள் ஒவ்வொன்றும் தத்தது இன, மத, பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப இலக்கை தெரிந்தெடுத்து கடைப்பிடித்து வருகின்றன.

L.செத் என்ற பிரபலம் முழு, பகுதியளவு Planning என்பதாக வகுக்கின்றார்.

3) செயற்பாட்டு Planning.
நிர்வாகத்துடன், Internal Administrative அடிப்படையில் தொடர்புடையது.

இதை விட Planningஐ வேறும் பல வகையாக பிரிக்கின்றனர்.
அவையாவன, கொள்கை, நிர்வாகம், நிகழ்ச்சி, பிராந்தியம், பரவலாக்கம், தொழிற்பாடு, அமைப்பு திட்டமிடல் என வகைப்படுத்த முடியும்.

கொள்கை வகுக்கின்றவர்கள் தத்தமது இலக்கினை நிறைவேற்ற பயன்படுத்துகின்ற கருவியே Planning.


எது எப்படியோ திட்டமிடலை வெற்றிகரமானதாக வடிவமைக்க வேண்டுமாயின், அரசியல் ஸ்திரத்தன்மை முக்கியமானதாகும். அரசியல் ஸ்திரத்தன்மை இல்லா விடில் திட்டமிடல் வெற்றிகரமானதாக இருக்காது.

ஆக அரசியல் உறுதிப்பாடுடைய திட்டமிடலே ஆரோக்கியமான சூழலை உருவாக்கும்.






















Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post