Srilanka Education Administrative Service Srilanka Education Administrative Service - examsguide.lk

SLEAS- Past Papers


 >

You have to wait 60 seconds.
Download Timer

Your download will begin in 60 seconds.









போட்டிப்பரிட்சைகளுக்கான பிரபல வளவாளர் நவநீதன் Sir ,Assistant Director,Srilanka Education Administrative Service (SLEAS) அவர்களின் முகநூலிருந்து தேசிய கல்வி ஆணைக்குழுவின் கல்வித் தரத்தை உயர்த்துதல் முன்மொழிவுகள் 2016 பெறப்பட்டது.

https://www.facebook.com/Sivapathasundrampillai.navaneethan

வாசிக்க,பதிவிறக்க கீழே தொடுகை செய்யவும்

    👇👇

தேசிய கல்வி ஆணைக்குழுவின் கல்வித்தரத்தை உயர்த்துதல் முன்மொழிவுகள்-2016

எந்த விருத்தியடைந்த நாட்டினை எடுத்துக் கொண்டாலும் உண்மையிலேயே அபரிதமான விருத்தி என்பது இரு விடயங்கள் மட்டுமே இயலுமானதாக்கும். அவையாவன கல்வியும்,சுற்றுலாவும்.


ஆனால் இலங்கையின் கல்வியின் விளைபயன்,வினைத்திறன்,தரம் தொடர்பில் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டே வருகின்றன..அனுபவ ரீதியாக மறுக்க முடியாத உண்மையும் கூட. 


கல்வியின் தார்ப்பரியம் என்னவென்பதை இலங்கையின் கல்வி முறை தெளிவுபடுத்தாமை மிகப்பெரும் குறைபாடாகும்... 


கல்வி என்பது மூன்று வேளை வயிற்றுப்பசியை போக்குவதற்காக ATM மெஷினை சென்றடைவதற்கான வழி என்ற தவறான தார்பரியத்தை இல்லாதொழிக்க வேண்டியது கல்வியின் மிகப்பெரும் சவால்.


கல்வி என்பது ஏழ்மையில் இருக்கின்றவர்களை கை தூக்கி விடுவதற்கான வாய்ப்பு என்பதை கற்பிக்க வேண்டும், உங்கள் கல்வியால் ஏழ்மை காரணமாக படிப்பை பாதியில் கைவிட்டவர்களை கைதூக்கி விட வேலைவாய்ப்புக்களை வழங்க முன்னேறுதலை தெளிவுபடுத்த வேண்டும், அபிவிருத்தி குன்றிய இலங்கை நாட்டை அபிவிருத்திடைய செய்வதற்காக கல்வி பயன்படுத்தப்பட வேண்டும். காப்புரிமை,Service fee என்று கோடி கோடியாக வெளிநாடுகளுக்கு உழைத்துக்கொடுக்காமல் இலங்கையராகிய நாம் கண்டுபிடிப்புக்கள்,புத்தாக்கங்கள்,உயர் சேவைத்தொழில் விருத்தி மூலம் இலங்கை நாட்டின் நிதி,வளம் சுரண்டப்படாமல் காப்பாற்ற வேண்டிய கடமையை புரிய வைக்க வேண்டும்.


இதைத்தான் கல்வி சொல்லித்தர வேண்டும். வெறும் ஏட்டுப்படிப்புடையவர்களை அல்ல,புதிதாக சிந்திக்காத வெறும் இயந்திரங்களை அல்ல .. இயந்திரங்களை உருவாக்குபவர்களை கல்வி படைக்க வேண்டும்.


இலங்கையின் தொழினுட்ப அறிவையும், வெளிநாட்டு தொழினுட்ப அறிவையும் ஒப்பிட்டு பார்க்கும் போது எந்தளவுக்கு பின்தங்கியிருக்க இலங்கையின் கல்வி முறை துணை புரிகின்றது என புரிந்து கொள்ள முடியும்.


First we know,Who am I ? நாம் யார் என்று எங்களுக்கே புலப்படாத வகையில், என்ன நோக்கத்திற்காக படைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை இனங்காண முடியா சோம்பல் தன்மையை அரசியல்வாதிகளும்,கல்வி வியாபாரிகளும் தங்களுக்கு சாதகமாக்கி  காய் நகர்த்திச் செல்லும் கைங்கரியத்தை உணராமலே வாழ்ந்து மடிய பிரயாசைப்படுகின்றோம்..


இது தான் கல்வியா? இது தான் கல்வியின் தார்ப்பரியமா? 

பார்ப்போம் வெளியிடப்பட்ட தேசிய கல்வி ஆணைக்குழுவின் கல்வித் தரத்தை உயர்த்துதல் முன்மொழிவுகள் 2016 மூலம் ஏதாவது சாதகமான முன்னேற்றம் ஏற்படுகின்றதா என்று?

இது ஒருபுறமிருக்க Srilanka Education Administrative Service Examக்கு உபயோகிக்கப்படக்கூடிய விடயங்களையும் Pdf வடிவில் ஒரே பார்வையில் பார்க்கும் வண்ணம் தொகுத்து ஒவ்வொன்றாக நவநீதன் Sir தந்துள்ளார். 

அதில் உள்ளடங்கியுள்ள விடயங்களாக பின்வருவன காணப்படுகின்றன.

கல்வி மூலத்தத்துவம் Google Form, வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பான வழிகாட்டல் கைந்நூல், எமது பாடசாலை எந்தளவுக்கு தரமானது? , பாடசாலை திட்டமிடல் பற்றிய வழிகாட்டி கைந்நூல், பாடசாலையினுள் ஒழுக்கம் பேணல் சுற்று நிருபம், கற்கை விடுமுறை Circular, கல்வியின் அடிப்படைகளும் பாடசாலை முகாமைத்துவமும் கைந்நூல், பிள்ளை உளவியலுக்குரிய வளர்ச்சியும் விருத்தியும் நடைபெறும் ஒரு உயிரி என்ற வகையில் பிள்ளையிடத்தே நிகழும் மாற்றங்கள், வலயக்கல்விப் பணிமனைகளை தரப்படுத்தல்,கல்வியின் அடிப்படைகள், பாடசாலை தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவத்திற்கான தேசிய தேர்ச்சி சட்டகம், பாடசாலை மட்ட ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி வழிகாட்டல் கையேடு,பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட பண்பு ரீதியான அளவு ரீதியான கட்டமைப்பு ரீதியான அபிவிருத்திக்கான திட்டமிடல்கள் மற்றும் பெறுகை செயற்பாடுகள் தொடர்பான சுற்று நிருபம் மற்றும் வழிகாட்டி கைநூல் இது போன்ற இன்னோரன்ன விடயங்களின் List நீண்டு கொண்டே இருக்கின்றது..இவற்றை தெரிந்து கொள்ளாமல் Exam Hallக்கு போய் ஒரு தமிழ் முஸ்லிம்கள் கூட சித்தியடையாத போது திறமையில்லையா என கொடி பிடிப்பதை அண்மைக்காலத்தில் கடந்து வந்திருக்கின்றோம்.. ஒன்றையும் Skip பண்ணாமல் படித்து கொள்வதோடு சுயதேடலுடன் கூடிய தொடர்ந்தேர்ச்சியான கற்றலையும் தொடருங்கள்

கீழேள்ள விடங்களை தொடுகை செய்வதன் மூலம்  Download பண்ண முடியும்

👇👇

கல்வி மூலத்தத்துவங்கள்


வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பான வழிகாட்டல் கைந்நூல்


இலங்கை கல்வி நிர்வாக சேவையின் iii ஆம் வகுப்பின் உத்தியோகத்தர்களுக்கான முதலாவது வினைத்திறன் தடை தாண்டல் பரீட்சை-2015


இலங்கை கல்வி நிர்வாக சேவை iii ஆம் வகுப்புக்கு உத்தியோகத்தர்களை சேர்த்துக் கொள்வதற்கான (மட்டுப்படுத்தப்பட்ட) போட்டிப்பரீட்சை-2020/2021.                                          சேவை அனுபவம் மற்றும் தகைமை அடிப்படையில் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் iii ஆம் வகுப்புக்குச் சேர்த்துக்கொள்ளும் போட்டிப்பரீட்சை-2020/2021. 


பாடசாலை மட்ட ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி வழிகாட்டல கையேடு


பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட பண்பு ரீதியான, அளவு ரீதியான, கட்டமைப்பு ரீதியிலான அபிவிருத்திக்கான திட்டமிடல்கள் மற்றும் பெறுகைச் செயற்பாடுகள் தொடர்பான சுற்றுநிரூபம் மற்றும் வழிகாட்டற் கைந்நூல்


பாடசாலைத் திட்டமிடல் பற்றிய வழிகாட்டிக் கைநூல்


கற்கை விடுமுறை சுற்று நிரூபம்


எமது பாடசாலை எந்தளவிற்குத் தரமானது? 


பாடசாலை தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவத்திற்கான தேசிய தேர்ச்சி சட்டகம்- அமுலாக்கல் ஆலோசனை கைந்நூல்


வலயக் கல்விப் பணிமனைகளைத் தரப்படுத்தல்


பிள்ளை உளவியல்- வளர்ச்சியும் விருத்தியும் நடைபெறும் ஒரு உயிரி என்ற வகையில் பிள்ளையிடத்தே நிகழும் மாற்றங்கள்.


கல்வியின் அடிப்படைகளும் பாடசாலை முகாமைத்துவமும் கைந்நூல்


பாடசாலையினுள் ஒழுக்கம் பேணுதல்- சுற்றறிக்கை


கல்வியின் அடிப்படைகள்- Principles of Education 











1 Comments

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

  1. உங்கள் சேவைக்கு மிக்க நன்றி வாழ்த்துகள் sir

    ReplyDelete

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post