IQ IQ - examsguide.lk

 IQ

>

You have to wait 60 seconds.
Download Timer

Your download will begin in 60 seconds.






நுண்ணறிவு என்பது மிக நுணுக்கமான விடயங்களை கற்றுக் கொள்வதாகும். அதிக நேரத்தினை விரயமாக்காது மிக எளிமையான முறையில் ஒரு விடயத்தினை செய்து முடித்தல்.இப் பாட பரப்பானது கணிதத்தோடு தொடர்புடையதாக இருப்பினும் சற்று  வேறுபாடானதாகவே உள்ளது. கணிதத்தில் சிறப்பாக சாதித்தவர்கள் கூட நுண்ணறிவில் தோற்று போயுள்ளனர். 

நுண்ணறிவில்  சாதிப்பதற்கு நுணுக்கமும் பயிற்சியும் இன்றியமையாதவையாகும். நுண்ணறிவானது தரம் 5 புலமை பரிசில் கற்கும் மாணவர் தொடக்கம் தொழில் வாய்ப்பு தேடுபவர்கள் வரை அவசியமானதாகும்.அரச தொழில் ஒன்றினை பெறுவதற்கு பொது அறிவு போல நுண்ணறிவில் சித்தி அடைதலும் கட்டாயமாகும். நுண்ணறிவு என்ற பாட பரப்பில் தர்க்க ரீதியானா வினாக்கள், பந்தி வினாக்கள், பட வினாக்கள், போன்ற பல தரப்பட்ட விடயங்களை உள்ளடக்கியதாகும். எல்லோருக்கும் எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது ஆனால் பயிற்சியும் முயற்சி இருந்தால் சாதிக்க முடியும். 

ஒரு வினாவிற்கு நுணுக்கமானதும் இலகுவானதுமான விடையினை கண்டுபிடித்து நேரத்தை சிக்கன படுத்துதல் நுண்ணறிவு ஆகும். ஒரு விடயத்தை அடைய வேண்டும் எனின் பயிற்சியும் முயற்சியும் அவசியம்.  நுண்ணறிவில் தேர்ச்சி பெற்ற ஆசான்களுடைய புத்தகங்களை பெற்று அதிலுள்ள வினாக்களை மீண்டும்  மீண்டும் செய்து பார்ப்பதன் மூலம் நுண்ணறிவில் சிறப்பான தேர்ச்சியை பெற முடியும். 

நுண்ணறிவினை கற்பதன் மூலம் பிரச்சினை ஒன்றை இலகுவான முறையில் விளங்கி  கொண்டு அதற்கான தீர்வினை பெற்றுக் கொள்வது பற்றி கற்று தருகின்றது. மிக இலகுவான வினாவாக இருக்கும் ஆனால் நுணுக்கம் பற்றி தெரியாததால் நாம் அவ் வினாவினை செய்ய தவறுகின்றோம்.  

அனேகமான மாணவர்கள் கேள்வி இலகு ஆனால் நேரம் போதாது என்று கூறுகின்றனர். இதற்கு காரணம் ஒரு நேரத்தை குறித்து நாம் வினாக்களை செய்து பார்ப்பதில்லை. நுண்ணறிவை பொறுத்த வரை பயிற்சி தான்  முக்கியமானது.

இனிவரும் சந்ததியினரும் IQவில் தோற்றுப் போனவர்களாக மாறாமல் இருக்க ஒவ்வொரு நாளும் தொடர்ந்தேர்ச்சியாக நேரம் ஒதுக்கி கற்றுக் கொள்ளல் உத்தமம். தெரியாதவற்றை முகநூல் கல்விக்குழுமங்களில் பதிவதன் மூலம் சுயநலமில்லாத உன்னதமானவர்களிடமிருந்து விளக்கங்களை பெற்றுக் கொள்ள முடியும்.
இனியும் சோம்பியிராமல் கற்றுக்கொள்ளுங்கோ.

3 Comments

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

  1. After 60 Seconds Download Button வரும் அதை Click பண்ணினால் Pdf தான் வரும்

    ReplyDelete
  2. thanks a lot, very use full documents for IQ....

    ReplyDelete

Post a Comment

Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்

Previous Post Next Post