
IQ மாதிரி வினாத்தாள் 04: சொல் இணை ஒப்புமை, இரகசியக் குறியீடுகள், ஆள் – கிளை – போக்குவரத்து பொருத்துதல் உட்பட 60 வினாக்கள் – 90 நிமிடம், 100 புள்ளிகள்.
IQ மாதிரி வினாத்தாள் 04
அனைத்துப் போட்டிப் பரீட்சைகளுக்குமான நுண்ணறிவு (IQ) — தமிழ் மொழி மூலம்
குறியீடுகள், அட்டவணைகள், உரு எண்ணுதல் — கவனிக்க வேண்டியவை
போட்டிப் பரீட்சைகளின் நுண்ணறிவு வினாத்தாளில் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு திறனைச் சோதிக்கின்றது. இந்த மாதிரி வினாத்தாளில் சொல் தொடர்புகள், இரகசியக் குறியீடுகள், தகவல் பொருத்துதல், நேர அட்டவணை, வட்ட இருக்கை ஒழுங்கு, கணிதப் பிரச்சினைகள், தரவு அட்டவணை, தரவுப் போதுமை, உருக்களை எண்ணுதல், ஆடி விம்பம் உட்படப் பன்னிரண்டு வகைகள் இடம்பெறுகின்றன.
இரகசியக் குறியீடுகள்: முதலில் எழுத்துகள் முன்னோக்கியா பின்னோக்கியா நகர்கின்றன, சொல் தலைகீழாக எழுதப்படுகின்றதா, எழுத்துகளுக்கு எண் பெறுமானம் வழங்கப்படுகின்றதா என்பதைச் சோதியுங்கள். A = 1 முதல் Z = 26 வரையான பெறுமானங்களை மனப்பாடம் செய்வது நேரத்தைச் சேமிக்கும்.
வட்ட இருக்கை ஒழுங்கு: எல்லோரும் மையத்தை நோக்கி அமர்ந்திருந்தால் ஒருவரின் இடப்புறம் வலஞ்சுழித் திசையிலும் வலப்புறம் இடஞ்சுழித் திசையிலும் அமையும். ஒருவரை நிலையாக வைத்து மற்றவர்களை அவரைச் சுற்றி அமைத்தால் சுழற்சியால் ஏற்படும் குழப்பம் நீங்கும்.
தரவுப் போதுமை: இங்கே விடையைக் கணிப்பது அவசியமில்லை; விடையைப் பெற முடியுமா என்பதை மட்டும் தீர்மானியுங்கள். முதலில் X ஐத் தனியாகவும், பின்னர் Y ஐத் தனியாகவும், இறுதியாக இரண்டையும் சேர்த்தும் சோதியுங்கள்.
உருக்களை எண்ணுதல்: n × n சதுர வலையில் உள்ள சதுரங்கள் 1² + 2² + … + n². செவ்வகங்களுக்கு கிடைக் கோடுகளில் இரண்டையும் நிலைக்குத்துக் கோடுகளில் இரண்டையும் தெரிவுசெய்யும் வழிகளைப் பெருக்குங்கள்.
ஆடி விம்பம்: நிலைக்குத்துக் கண்ணாடியில் இடம்–வலம் மட்டும் மாறும்; நீரில் மேல்–கீழ் மாறும். கடிகாரத்தின் ஆடி விம்ப நேரத்தை 11.60 இலிருந்து கழித்தால் உண்மை நேரம் கிடைக்கும்.
IQ மாதிரி வினாத்தாள் 04 — வினா வகைகள் (60 வினாக்கள், விடைகளும் விளக்கங்களும்)
இலங்கையின் போட்டிப் பரீட்சைகளுக்கான (SLAS, அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ உதவியாளர், சமுர்த்தி, கிராம உத்தியோகத்தர், உள்நாட்டு இறைவரி, சட்டக் கல்லூரி) தமிழ் மொழி மூல நுண்ணறிவு (IQ) மாதிரி வினாத்தாள். ஒவ்வொரு விடைக்கும் உடனடியாக விளக்கம் வழங்கப்படும்.
- 1–5: சொல் இணை ஒப்புமை
- 6–10: இரகசியக் குறியீடுகள்
- 11–15: ஆள் – கிளை – போக்குவரத்து பொருத்துதல்
- 16–20: நேர அட்டவணை
- 21–25: வட்ட மேசை இருக்கை
- 26–30: வயது, சதவீதம், கடிகாரம், வேகம்
- 31–35: தரவு அட்டவணை
- 36–40: தரவுப் போதுமை
- 41–45: உருக்களை எண்ணுதல்
- 46–50: ஆடி விம்பம், நீர் விம்பம்
- 51–55: வரிசையில் இடம்
- 56–60: வேறுபட்ட எண்
பரீட்சையை ஆரம்பிக்க
ℹ உங்கள் பெயர், மாவட்டம், புள்ளிகள் தரவரிசையிலும் examsguide.lk Facebook group இலும் வெளியிடப்படும். (Your name, district and marks may be published in the leaderboard and Facebook group.)
வினாக்கள் மறைக்கப்பட்டுள்ளன
மேலே உங்கள் பெயரை உள்ளிட்டு “▶ பரீட்சையை ஆரம்பி” அழுத்தியதும் 60 வினாக்களும் தோன்றும். நேரமும் அப்போதே ஆரம்பமாகும்.
(Questions appear only after you press Start. The timer starts at the same moment.)தரவரிசைப் பட்டியல் – IQ-04
📊 எல்லா வினாத்தாள்களிலும் பெற்ற புள்ளிகள் (Marks – all IQ papers)
ஏற்றப்படுகின்றது…
முந்தைய வினாத்தாள்களின் தரவரிசைகள் (Earlier papers – all marks)
இந்த வினாத்தாளை நண்பர்களுடன் பகிர்க (Share this paper)
— examsguide.lk —
Post a Comment
Comment எழுதிய பின்னர் Publish என்ற Buttonஐ அழுத்துங்கள்